பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுங்கள் – இந்திய தேர்தல் ஆணையம்
புதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது வழக்கமான நடைமுறை.இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரபடுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி அறைவிக்கப்பட்டுவிட்டதால் இவ்வாறு வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று கூறி இதனை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பி.டி.ஐ ஒரு ஈ.சி.ஐ அதிகாரி கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தூதுக்குழு ஈ.சி.ஐ அதிகாரிகளைச் சந்தித்து, பல்வேறு மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் மோடியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
ECI directs petrol pumps to remove hoardings carrying photograps of PM within 72 hours: official
— Press Trust of India (@PTI_News) March 3, 2021