மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்து வந்த நிலையில் அவர்களை பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பாஜக நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தலைநகர் டெல்லியில் தீவிரமைடைந்து உள்ளது.பாஜக,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் பிரச்சார கூட்டத்தில் பேசியது சர்ச்சையாக மாறியது.டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அனுராக் தாகூர் பேசுகையில், நாட்டின் துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று பேசினார்.மத்திய அமைச்சார் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பாக , காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அனுராக் தாகூரை போலவே பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது, தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில், காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அது டெல்லியிலும் நடக்கும் .பாஜக வெற்றி பெற்ற இரவே ஷாகீன் பாக் இடம் காலி செய்யப்படும். ஷாகீன்பாக்கில் கூடியுள்ளவர்கள், உங்கள் வீடுகளுக்குள் புகுந்து, உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள் என்று பேசினார்.இவர் மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…