காசிப்பூர் எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகள் அகற்றம்.!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகள் அனுமதியை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் இணைய வசதியை அரசு துண்டித்தது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மேலும் முன்னேறக்கூடாது என்பதற்க்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில், முள்வேலியினாலான தடுப்புகள் மற்றும் சாலையில் ஆணிகளை போலீசார் பாதித்தனர்.
காவல்துறையின் இந்தநடவடிக்கைக்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் தற்போது போலீசார் சாலையில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.