இவர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு – ஜன16ல் செயல் விளக்கம்!
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கு செயல் விளக்கம்.
சொந்த ஊர்களை விட்டு வேறு இடங்களில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு முறையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜன.16ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.