ரிமோட் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லியில் ரிமோட் வாக்கு பதிவு வசதி பற்றி தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லியில் ரிமோட் வாக்கு பதிவு வசதி பற்றி தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து இயந்திரத்தில் வாக்களிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் அளிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுகவில் பழனிசாமி தரப்பு சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் ஆகியோரும், பன்னீர்செல்வம் தரப்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.