கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டதால், அந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. பலர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவால் பாதிப்படைந்து கருப்பை பூஞ்சை தொற்றால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ததன் விளைவாக அதன் தேவையும் அதிகரித்தது.
ஆனால் ரெம்டெசிவிர் மருந்தின் இருப்பு குறைவாக இருந்த காரணத்தால் 40 புதிய உற்பத்தி மையங்களை தொடங்கி உற்பத்தியை அதிகரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 22 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதும் 62 மையங்களில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்த மருந்தின் தேவையை விட இந்த மருந்து உற்பத்தி அதிகமாகி உள்ளது எனவும், அது மட்டுமல்லாமல் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மருந்துகளை எப்படி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…