கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு!
கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தி மண்டலத்தில் உள்ள மாதவபுரம் அருகில் இன்று அதிகாலை சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில், வேனில் பயணம் செய்த 8 ஆண்கள் ஒரு குழந்தை, ஐந்து பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் இரண்டு பேர் படுகாயமும் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களின் உடலை கிரேன் உதவியுடன் மீட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். துரதிஸ்டவசமான கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
An ex-gratia of Rs. 2 lakh each from Prime Minister’s National Relief Fund would be given to the next of kin of those who have lost their lives due to the unfortunate road accident in Kurnool, Andhra Pradesh. Rs. 50,000 would be given to those seriously injured.
— PMO India (@PMOIndia) February 15, 2021