உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் இருக்கும் சாமியார் சத்சங்கம் நிகழ்ச்சியானது நேற்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கியுள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் பலர் உயிரிழக்க தொடங்கினார்கள். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கவும் தொடங்கியது.
இதில் 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ், அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, மத்திய அமைச்சர்கள், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தள்ளனர்.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…