ஹாத்ரஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசல் ..! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

UP- Hatrus religious worship

உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் இருக்கும் சாமியார் சத்சங்கம் நிகழ்ச்சியானது நேற்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், பலர் மூச்சி திணறி அங்கேயே மயங்கியுள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதில் பலர் உயிரிழக்க தொடங்கினார்கள். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கவும் தொடங்கியது.

இதில் 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ், அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  குடியரசுத் தலைவர் முர்மு, மத்திய அமைச்சர்கள், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 25 01 2025
INDvsENG 2nd t20 chennai
Himachal Pradesh approved medical research purpose Cannabis planet
VCK Leader Thirumavalavan - Vengaivayal - Pa ranjith
MagizhThirumeni ajith
Varun Chakravarthy
T20 Cricket - Bus