ரிலையன்ஸ் ஜியோவுக்கு மேற்கு வங்கத்தில் தொலைத்தொடர்பு கேபிள் அமைக்க அனுமதி .!
மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ கடலுக்கு அடியில் தொலைத்தொடர்பு கேபிள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஒரு ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்க தனது அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். அதே நேரத்தில் அங்கு பிராட்பேண்ட் கேபிள் வசதியும் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க திகா பகுதியில் தொலைத்தொடர்பு கேபிள் அமைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது .ரிலையன்ஸ் ஜியோ சுமார் ரூ .1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது.
இந்த நிலையத்தை கட்ட ரிலையன்ஸ் ஜியோ ஏலம் எடுத்ததுடன், மாநில அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கியுள்ளது. இந்த முடிவு நேற்று அமைச்சரவையில் எடுக்கப்பட்டது என்று மம்தா பானர்ஜி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மாநில செயலகத்தில் கூறினார்.