ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் மதிப்பில் வர்த்தகமானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஜனவரி 29 ஆம் தேதியே ரூ.19 லட்சம் கோடியை தொட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
ஒரு கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!
2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் உள்ளது. இந்த சில நாட்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த ஒரு வருடமாக உயர்ந்து வருகின்றன. நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டால் கடந்த 12 மாதங்களில் பங்குகள் கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளன.
ரிலையன்ஸ் துணை நிறுவனமான Jio Financial Services இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஜியோவின் சந்தை மதிப்பு ரூ.1.70 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.