சீக்கிய கைதிகளை விடுவியுங்கள்..! வாள்களுடன் போராட்டக்காரர்கள் மோதல்..!

Default Image

சீக்கிய கைதிகளை விடுவிக்கக்கோரி பஞ்சாப் மாநிலம் சண்டிகர்-மொஹாலி எல்லையில் போராட்டக்காரர்கள் வாள்களுடன் காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள சீக்கிய கைதிகளை விடுதலை செய்யுமாறு பஞ்சாப் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபின் தலைநகரமான சண்டிகரில், தண்டனை முடிந்த போதிலும் நாடு முழுவதும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சீக்கிய கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை  வைக்க முதல்வர் பகவந்த் சிங் மான் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் சென்றுள்ளனர்.

Punjab protest 1
[Image Source : Twitter/@jasveermuktsar]

போராட்டக்காரர்கள் முதல்வர் இல்லத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க, போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகள் வழியாக வலுக்கட்டாயமாக செல்ல முயன்றபோது, அவர்களை கலைக்க சண்டிகர் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுடன் கையில் வாள்களுடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதலில் 30 போலீசார் காயமடைந்தனர் மற்றும் பல  வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்த காவல்துறையினர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று சண்டிகர் காவல்துறை தலைமை இயக்குனர் பிரவீர் ரஞ்சன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்