#BreakingNews : திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்பு, திரையரங்களுக்கு தடை விதித்துள்ளது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தடைவிதிக்கப்பட்டது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
வழிகாட்டு நெறிமுறைகள் :
- குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
- படப்பிடிப்பு தளத்தில் முகக்கவசம் அணிய வேண்டும்.
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது .
- படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் .
- உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம் .
- படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் .
- படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
- வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.