சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற உறவினர்கள்!
ஆந்திரமானித்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கோத்தவல்சா கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வழியால் துடித்துள்ளார்.அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல வாய்ப்பில்லை.
அதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மரக்கடடையில் துணி ஒன்றை கட்டி தொட்டில் மாதிரி செய்து கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்கை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.சுமார் 6 கிமீ தொட்டிலில் சுமந்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரசவத்திற்கு பிறகு குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் உறவினர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH A pregnant woman carried for more than 6 kms to KJ Puram hospital from Kothavalsa village on a makeshift stretcher made from a cloth tied to a wooden log, due to lack of road connectivity. The woman & the child are in stable condition. #Visakhapatnam pic.twitter.com/Wn9VtS0IHI
— ANI (@ANI) July 21, 2019