குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உறவினர்கள் நேரில் அஞ்சலி …!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு அவர்களது உறவினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவ விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் டெல்லி வந்தடைந்துள்ளது.
இவர்களது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தற்பொழுதும் உயிரிழந்த 13 பேரின் உறவினர்கள் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.