இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கான மருத்துவ காரணங்களை விசாரித்து விரைவில் வெளியிடுவோம் என சுகாதார அமைச்சர் தகவல்.
கொரோனாவால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், கொரோனா வைரஸ் மாறி மாறி உருமாறி வருகிறது. இந்தியாவில் இதுவரை 214 வெவ்வேறு கொரோனா வைரஸின் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய அரசு தயார்:
சமீபத்திய தொற்றுநோய்களை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். ஐசியூ படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. கொரோனா எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க இயலாது, ஆனால் இப்போது எழுச்சியை உண்டாக்கும் துணை வகைகள், பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை அல்ல என்றார்.
மாரடைப்பு – கொரோனா தொடர்பா?
இதன்பின் பேசிய அமைச்சர், இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்தும் கூறினார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புகளுக்கும், கொரோனாவுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. எத்தனையோ இளம் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பொதுநிகழ்ச்சியின் போது இறப்பதை பார்த்தோம், பல இடங்களில் இருந்து அறிக்கைகள் வர ஆரம்பித்தன. நாங்கள் இதனை விசாரித்து வருகிறோம்.
விரைவில் வெளியிடுவோம்:
இதற்கான மருத்துவ காரணங்களை விசாரித்து விரைவில் வெளியிடுவோம். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதற்கான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கோவிட் தொற்று நோயின் 4வது அலையில், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கடைசி கோவிட் பிறழ்வு Omicron-இன் BF.7 துணை மாறுபாடு ஆகும், இப்போது XBB1.16 துணை மாறுபாடு நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. துணை மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை அல்ல என்றும் கூறினார்.
பக்கவாதம் மற்றும் கோவிட்:
ஒரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டால், அதை ஆய்வகத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்துவோம். அதன் பிறகு, தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை, எங்கள் தடுப்பூசிகள் தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக வேலை செய்துள்ளன.
CoWIN இயங்குதளம் அனைத்து தடுப்பூசி தரவுகளையும் வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கடந்த 3-4 மாதங்களாக பக்கவாதம் மற்றும் கோவிட் இடையேயான தொடர்பையும் ஆய்வு செய்து வருவதாகவும், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…