கையேடு வந்த துப்பட்டா….சம்பந்த பட்ட பெண் விளக்கம்…!!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை என்று அந்த பெண் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சித்தராமையா . இவர் தற்போது மதற்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில் இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடையே குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.அவ்வாறு வருணா தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த சித்தராமையா_விடம் ஒரு பெண் கேள்விகளை கேட்டதாக தெரிகின்றது.
இதையடுத்து சித்தராமையா அந்த பெண்ணை அமைதியாக அமர சொன்னார்.அப்போது அந்த பெண் மீண்டும் எழுந்து கேள்வி கேட்டார் அப்போது ஆத்திரமடைந்த சித்தராமையா அந்த பெண்ணிடம் இருந்த மைக்_கை கையால் பிடுங்கினார்.அப்போது அந்த பெண்ணின் துப்பட்டவும் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்திற்கு தற்போது அந்த பெண் விளக்கமளித்துள்ளார். ஜமாலா என்ற அந்த பெண், சித்தராமையாவிடம் தான் முரட்டுத்தனமாக பேசியதாக கூறியுள்ளார். மேஜையை தட்டி பேசியதால் அவர் கோபமடைந்ததாக அந்த பெண் விளக்கமளித்தார். ஜமாலாவை தமக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும் என்று குறிப்பிட்ட சித்தராமையா, நடந்த சம்பவம் தற்செயலானது என்று விளக்கமளித்திருக்கிறார்.