மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரித்தார் வெங்கையா நாயுடு.
மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமடைந்து, கடும் அமளில் ஈடுபட்டனர். எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் துணை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்க கடிதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் நிராகரிப்பு என்று தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் எம்.பி.க்களான ராஜீவ் சதவ், நசீர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களான ராகேஷ், இளமாறம் கரீம், ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…