ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், முதல்வர் கெலாட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா 3 முறை கூட்டத்தொடர் கூட்ட அரசு தரப்பில் கொடுத்த பரிந்துரை கடிதத்தை நிராகரித்தார்.
முதல் இரண்டு பரிந்துரை கடிதத்தில், கொரோனா பாதிப்பு குறித்தும், சில மசோதாக்கள் பற்றியும் ஆலோசிக்க வேண்டுமென அரசு கூறியதே தவிர, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறவில்லை என கூறினார்.
மேலும், சட்டப்பேரவையை கூட்ட 21 நாள் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்பது போன்ற 3 நிபந்தனைகளை ஆளுநர் அறிவித்தார். ஆனால், ராஜஸ்தான் முதல்வர் கெலாட் வரும் 31-ம் தேதி முதல் சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி 3-வது முறையாக பரிந்துரை கடிதம் அனுப்பினார். நேற்று இந்த கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, நேற்று மாலை சபாநாயகர் சி.பி.ஜோஷி மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அப்போது, ஆளுநர் உத்தரவுப்படி ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென வலியுறுத்தி அரசு தரப்பில் 4-வது முறையாக பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட்டப்படும் என ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…