நாளை மறுநாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கின்ற சூழ்நிலையில், ஏற்கனவே கொரானா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கொண்டாட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் என அனைத்திற்குமே தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சுதந்திர தின விழா அரசு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ளது. வருகிற 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் இந்த சுதந்திர தின விழாவுக்காக தற்போது டெல்லி செங்கோட்டையில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் ஒத்திகை நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…