ரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல அனுமதி மறுப்பு..!

Default Image

சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.  இதை எதிர்த்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில்  அனைத்து வயதுப் பெண்களும்  சபரிமலை ஐயப்பன் கோயிலில் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு சென்ற போது அங்கு இருந்த ஐயப்பன் பக்தர்களால் திருப்பி அனுப்பினர்.

பின்னர் போலீசார் பாதுகாப்புடன் இருவரும் பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி சென்றனர்.அப்போது சபரிமலை சன்னிதானத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரண்ட பக்தர்கள் அவர்களை நடத்து நிறுத்தினர்.பின்னர் போலீசார் பக்தர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
ஆனால் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.பிறகு இந்த விவகாரத்த்தில் தலையிட்ட கேரளா அரசு அவர்களை திருப்பி அனுப்ப போலீசாருக்கு உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்த சூழலில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனு  7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டும் ரெஹானா பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேரளா காவல்துறைக்கு மனு அனுப்பினார்.ஆனால் கேரளா காவல்துறை ரெஹானா பாத்திமாவிற்கு எந்தவித பாதுகாப்பும் கொடுக்கமுடியாது என கூறியுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்