டெல்லியில் தீவிபத்தில் 43 பேர் பலி ! உரிமையாளர் கைது
- டெல்லியில் நடந்த தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- தீவிபத்து நடைபெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஜான்சி ராணி சாலையில் உள்ள நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்தில் சுமார் 43-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தீவிபத்து நடந்த இடத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில் தீவிபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரேகானை டெல்லி போலீசார் கைது செய்தனர்.இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.