ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு விதிமுறைகள்! மத்திய அரசு வெளியீடு.!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆன்லைனில் விளையாடும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் தெரிவிக்கப்படும் புகார்களை, குறைகள் தீர்க்கும் குழு மூலம் உடனடியாக தீர்க்கவேண்டும். ஆன்லைன் விளையாட்டு தளங்கள், இந்தியாவில் சட்டம் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் பெட்டிங் மற்றும் கேம்பிளிங் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் நபரின் வயது மற்றும் விதிகளை பின்பற்றி நடப்பதற்கான சட்டங்களுக்கு கட்டுப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் நிறைய உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் நிகழ்ந்ததையடுத்து மத்திய அரசு இந்த வரைவு விதிமுறைகளைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென வெளியிட்டுள்ளது.