மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார்.
பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பெரிதும் எதிர்பார்ப்பது தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா..? என்பதுதான் காரணம் கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தவரும் நிலையில், இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என பல அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த சம்பளம் பெறும் வகுப்பினர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். இதுகுறித்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…