#BREAKING: புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு.., மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மிக மோசமான பரவி வரக்கூடிய நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பிணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மனுதார் மனு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)