பயணிகள் கவனத்திற்கு!! ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு.!

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

IndianRailways

புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும்.

தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு காலத்தை 2 மாதங்களாக குறைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த புதிய விதிகள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், அக்டோபர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்கள் என அமலில் இருக்கும்.

ஆனால், இந்தப் புதிய உத்தரவு வெளிநாட்டுப் பயணிகளின் முன்பதிவுக் காலத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்