‘பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு’ – மத்திய அரசு.!
பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய குழுவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகம் நெருக்கடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடப்படுகிறது.