எரிவாயு விலை குறைப்பு எனது சகோதரிகளின் வசதியை அதிகரிக்கும்.! பிரதமர் நரேந்திர மோடி

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் அவர்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைப்பவரின் கையில் மஞ்சள் நூல் கட்டுவது வழக்கம் ஆகும். இந்த ரக்ஷா பந்தன் ஆனது ஆகஸ்ட் 30ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் இருக்கும் பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் என் விருப்பம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதற்கும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.