ரெட் அலர்ட் எச்சரிக்கை : மகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி!

Default Image

மகாராஷ்டிரா கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, சத்தாரா, புனே, நாக்பூர், சந்திரபூர், பல்கர் போன்ற மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வந்த நிலையில், இந்த மாவட்டங்களில் வெள்ள பெருக்கு அதிகம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளைப்பருக்கு காரணமாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவின் போது 36 வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில், 47 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோரை காணவில்லை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை தொடரும் என்பதால் நேற்று மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினபுரி, சத்தாரா, புனே, சிந்துதுர்க், ராய்கட், கோலாப்பூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 18 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளதுடன், 15 ராணுவ அணிகளும் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முகாம்களில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 136 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்