இந்தியாவில் மீட்பு விகிதம் 62.78% ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை
குணமடைந்தவர்களின் விகிதம் மேலும் 62.78% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 822,603 பேருக்கு கொரோனா பாதிப்பு. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 516,206 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது உள்ள நோயாளிகளில் மொத்தமாக குணமானோர் எண்ணிக்கை இன்று 5 லட்சத்தை தாண்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமானோர் எண்ணிக்கை 2,31,978 ஐ விட அதிகமாக உள்ளது. இதனால் மீட்பு விகிதம் மேலும் 62.78% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.