சைக்கிளில் சென்ற சிறுமி சடலமாக மீட்பு…!
ஹைதராபாத்தில் காக்கட்டியா நகரைச் சேர்ந்தவர் சிறுமி சுமிதா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் சுமிதா தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார்.
மேலும் வெளியே சென்ற சுமிதா சில மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாக முதல்கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கினார். மேலும் ஏரிக்கு அருகில் உள்ள வடிகால் பகுதிகளில் சிறுமி சென்ற சைக்கிள் கிடந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் உடல் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளின் உடல் ஏரியில் காணப்பட்டதால் அவரது பெற்றோர் சோகத்தில் உள்ளனர். மேலும் சிசிடிவி கொண்டு இந்த சிறுமி உயிரிழப்பு எப்படி நடந்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.