உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது – சரத் பவார்

உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது .அப்பொழுது போலீசார் தடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார் ராகுல் காந்தி.இதன் பின் தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பக்க்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,ராகுல் காந்தி மீது உ.பி. காவல்துறையின் பொறுப்பற்று நடத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியவர்கள் ஜனநாயகத்தை நசுக்குவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
Reckless behaviour of UP Police towards @INCIndia leader Shri @RahulGandhi is extremely condemnable. It is reprehensible for those who are supposed to uphold the law to trample upon the democratic values in such a manner.
— Sharad Pawar (@PawarSpeaks) October 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025