மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எந்த பேச்சுவார்த்தையிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் கூறுகையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…