சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தயார் ..!தேவசம் போர்டு அறிவிப்பு…!கேரள அரசு வரவேற்பு …!
சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டு கூறியதற்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இதன் பின் பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் விளக்கம் ஒன்றை அளித்தார்.அவர் கூறுகையில், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செல்லவில்லை.சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேள்வி எழுப்பினார் .சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
திடீர் திருப்பாக சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்தது.அதேபோல் கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டு கூறியதற்கு கேரள அரசு வரவேற்கிறது என்று கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.