மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

Anurag Thakur

பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்த, மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. இந்த பஜ்ரங் புனியா சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளனர்.

தற்போது, மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ட்விட்டர் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் டெல்லி போலீசார் 2 முறை விசாரணை நடத்தியதாகவும், வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

வேலையை விட்டுவிடுவோம்:

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சாக்க்ஷி, புனியா, வினேஷ் ஆகியோர் தங்கள் பணிக்கு திரும்பினர். இதனை தொடர்ந்து, போராட்டத்சாக்ஷி தில் இருந்து மாலிக் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த தகவல் உண்மையில்லை என்று அவர்கள் விளக்கமளித்தனர்.

எங்கள் பதக்கங்கள் ஒவ்வொன்றும் 15 ரூபாய் என்று சொன்னவர்கள் இப்போது எங்கள் வேலையைப் பின்தொடர்கிறார்கள். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு வேலை தடையாக இருந்தால் அதனை விட்டுவிடுவோம் என மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

 हमारे मेडलों को 15-15 रुपए के बताने वाले अब हमारी नौकरी के पीछे पड़ गये हैं.

हमारी ज़िंदगी दांव पर लगी हुई है, उसके आगे नौकरी तो बहुत छोटी चीज़ है.

अगर नौकरी इंसाफ़ के रास्ते में बाधा बनती दिखी तो उसको त्यागने में हम दस सेकेंड का वक्त भी नहीं लगाएँगे. नौकरी का डर मत दिखाइए.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்