CBSC பாடத்திட்டத்தில் 10TH, 12TH வகுப்புக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு.!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் முதலில் நடைபெற்ற தேர்வில் எடுத்த மதிப்பெண்களை விட அதிகம் எடுக்க விரும்பும் மாணவர்களுக்கும் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்படும். இந்தாண்டு பிளஸ் டூ மறுதேர்வுக்கு 87 ஆயிரம் மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கான மறுதேர்வுக்கு 1.5 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ பாடத்தில் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதனை http://cbse.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பார்க்கலாம்.
மேலும் அட்டவணையின் படி பிளஸ் டூ மாணவர்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு துறை, மறுதேர்வு மற்றும் முன்னேற்ற தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.