செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இருந்தாலும் தேதி நெருங்கும் போது நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம்:
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்த கல்வி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளை மீண்டும் திறக்க செப்டம்பர்-5 ஆம் தேதி தேதியை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை பகல் உணவுக்கு பதிலாக உலர் ரேஷன்கள் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளில் வழங்கப்படும் என்று அவர் கூறினார். அடுத்த கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் முன் தொடக்கக் கல்வி (எல்.கே.ஜி மற்றும் யுகேஜி) அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஜூனியர் அரசு கல்லூரிகளில் உள்ள ஏபி ஈம்செட், ஜேஇஇ, ஐஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மதிய உணவு திட்டம்:
ஆந்திராவில் வழங்கப்படும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்டத்தில் இணை இயக்குநர் பதவியும் அமைக்கப்படும். மேலும் அவர் கூறுகையில்,”அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயலும் முறையாக செயல்படுத்த இரண்டு மாநில அளவிலான இயக்குநர் பதவிகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். ஜெகண்ணன்னா கோருமுதா என்ற (மதிய உணவு) திட்டம். ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு ஜூனியர் கல்லூரி அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று சுரேஷ் கூறினார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…