இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைக்கு மீண்டும் விண்ணப்பம்.!
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் V இந்தியாவில் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர் ரெட்டியின் ஆய்வு குழு கேட்டுக்கொண்டது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம், ரஷ்ய தடுப்பூசியின் 3 கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், இன்று அந்த கூட்டத்தில் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு விண்ணப்பத்தைப் பற்றி விவாதித்து. தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்டம் மருத்துவ பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று கூறி ஒரு திருத்தப்பட்ட நெறிமுறையை சமர்ப்பிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. மேலும், அதில் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் தடுப்பூசிக்கான கட்டம் -3 சோதனையை நேரடியாக நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஸ்பூட்னிக் – வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அதன் விநியோகத்திற்காக இந்திய மருந்து நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒத்துழைத்துள்ளது. இதனால், ஒழுங்குமுறை ஒப்புதலின் பிறகு ரசியாவின் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி இந்தியாவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.