Categories: இந்தியா

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி – காங்கிரஸ் தலைவர்

Published by
பாலா கலியமூர்த்தி

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.

காங்கிரஸின் 85-வது கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங்கியது. அப்போது இருந்ததுபோல், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது.

தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், திறமையான மற்றும் தீர்க்கமான தலைமையை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், சீனாவுடனான எல்லை பிரச்சினைகள், எல்லா நேரத்திலும் இல்லாத உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற சவால்களை நாடு எதிர்கொள்கிறது.

எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் “மக்கள் விரோத” பாஜக அரசில் இருந்து விடுபட, ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து சாத்தியமான மாற்றத்தை உருவாக்க காங்கிரஸ் எதிர்நோக்குவதாக கூறினார். எங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட நாங்கள் தயாராக உள்ளோம்.

மேலும் வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 தேர்தல்களுக்கு எங்கள் இலக்குக்குத் தேவையான பணிகளை செய்வோம். இந்தியாவில் “ஜனநாயகத்தை அழிக்க சதி” நடப்பதாக குற்றம் சாட்டினார், ஆனால் காங்கிரஸ் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

22 minutes ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

48 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

20 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

21 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

21 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

22 hours ago