எச்சரிக்கும் RBI.. அதிகரிக்கும் இணைய மோசடி.. இதை செய்துவிடாதீர்கள்..

Default Image

சமீபத்தில் பில் கேட்ஸ், எலோன் மஸ்க் போன்ற பல போன்ற நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. இந்த மிக மோசமான சைபர் தாக்குதல்களுக்குப் பிறகு, சைபர் குற்றங்கள் மற்றும் அடையாள திருட்டுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று காலை இந்திய ரிசர்வ் வங்கிதனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், மத்திய வங்கி இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக பாதுகாத்து கொள்ள சில நடைமுறைகளை பகிர்ந்து உள்ளது.

நீங்கள் செய்யக்கூடாதவை:

சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் ஒன் டைம் பாஸ்வேடு (ஓடிபி), யுபிஐ பின் அல்லது பிற வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

அடையாள திருட்டு( Identity theft):

ஆன்லைன் பயனாளர்கள் மத்தியில் அடையாள திருட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் மாதத்தில், நார்டன் லைஃப்லாக் (NortonLifeLock) என்ற நிறுவனம்  வருடாந்திர சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில்  10 பேரில் 4 பேர் (39 சதவீதம்) அடையாள திருட்டால் பாதிக்கப்பட்டதை காட்டியது. கடந்த ஆண்டில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடையாள திருட்டைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்:

அடையாள திருட்டைத் தடுக்க, நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது முறையான தளங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல், ஏடிஎம் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகள் ஒவ்வொரு முறையும் ( reports) கண்காணிக்கவும்.

சைபர் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி:

1. ஸ்லேட் கிளீன் :

ஸ்மார்ட்போன், ஐபாட் அல்லது லேப்டாப் போன்ற புதிய பொருள்களை நீங்கள் வாங்கியிருந்தால், உங்கள் பழைய  ஸ்மார்ட்போன், ஐபாட் ஆகியவற்றில் உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள்  மற்றும் பிற முக்கியமான டாக்குமெண்டை backup எடுத்து கொண்டு, பின்னர் உங்கள் பழைய ஸ்மார்ட்போன், ஐபாட்டை அந்த நிறுவனம் கொடுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி புகைப்படங்கள்  மற்றும் பிற முக்கியமான டாக்குமெண்டைஅழித்து விடவும்.

2. பொது சார்ஜிங் நிலையத்தைத் தவிர்க்கவும்:

ஒருவரின் சார்ஜிங் கேபிளைக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் அல்லது பொது யூ.எஸ்.பி(USB) சார்ஜிங் ஸ்டேஷன்களில் சார்ஜிங் செய்வதை தவிர்க்கவும், சைபர் கிரைமினல்கள் ஷாப்பிங் மால்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்களை எப்படி ஹேக் செய்வது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

3. வி.பி.என்  (VPN):

பொது வைஃபை (Public Wi-Fi) நெட்வொர்க்குகள் பயன்படுத்த வசதியாக இருக்கலாம், ஆனால் இந்த பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளில் நீங்கள் பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். மேலும்,  உங்கள் தனிப்பட்ட கணக்குகளை கடத்த அல்லது முக்கியமான தகவல்களைத் திருடலாம்.

பொது வைஃபை(Public Wi-Fi) யை பயன்படுத்தும்போது வி.பி.என்(VPN) பயன்படுத்தினால் சைபர் கிரைமினல் ஹேக் செய்யாமல் தவிர்க்க உதவுகிறது.

4. தொலைபேசி மோசடி:

மைக்ரோசாப்ட் அல்லது கூகிள் போன்ற நிறுவனங்கள் உங்கள் கணினியில் வைரஸைக்கண்டுபிடித்ததாக கூறி உங்களை அழைக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும், எதிர்பாராத விதமாக வங்கி அதிகாரி எனக்கூறி உங்கள் ஏடிஎம் பின், கிரெடிட் கார்டு விவரங்கள், ஓடிபி போன்ற முக்கியமான தகவல்களைக் கேட்டால், அவர்களுக்கு  உங்கள் விவரங்களை தர வேண்டாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்