ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம்.
இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025