வட்டிக்கு வட்டி வசூலித்ததை…நவ.,5க்குள் திருப்பி அளிக்க RBI உத்தரவு..
வங்கிகள் நவம்பர் 5ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல்வேறு வகையில் கடன் வாங்கியவர்களின் 6 மாத தவணைகளை கொரோனா பரவலல் ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்தது.
ஒத்திவைத்த அந்த 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் அறிவித்தது.இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஆக., மாதம் வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது.
இதனை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து விரைவில் நடைமுறைப்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு அரசிற்கு அறிவுறுத்தியது. மேலும் இது குறித்த தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு அக்., 23-ஆம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து, கடன்தாரர்கள் செலுத்திய கூடுதல் வட்டித்தொகையை அவர்களுக்கு நவம்பர் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இத்திட்டத்தை நவம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் செயல்படுத்துவதுடன், கடன்தாரர்களின் கணக்குகளில், சலுகை திட்டத்தின்கீழ் கணக்கிடப்பட்ட தொகையை வரவு வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
மத்திய அரசின் அறிவித்தபடியே வங்கிகள் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அனைத்து தொடக்க அதாவது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் (வங்கிகள்), வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் (வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உள்பட), இந்த திட்ட விதிகளின் கீழ், தேவையான நடவடிக்கைகளை நவம்பர் 5ந் தேதி எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட கடன் கணக்குகளில் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31ந் தேதி வரையிலான6 மாத காலத்துக்கான கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை கருணைத்தொகையாக செலுத்துவதற்கு இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.