இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!
இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு வரும் நிலையில்,ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும், சந்தையில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 76% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Withdrawal of ₹2000 Denomination Banknotes – Statushttps://t.co/oqXgKWd2tQ
— ReserveBankOfIndia (@RBI) July 3, 2023