கடுமையாக்கப்பட்ட UPI பணப்பரிவர்த்தனைகள்.! ரூ.2000க்கு மேல் அனுப்பினால் புதிய விதிகள்…

UPI

இந்தியாவில் யுபிஐ பயன்பாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிதாக சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறையாக மாறியுள்ளது.

அனைவரது கையிலும் மொபைல் போன்கள் உள்ளது. இதனால், ஆன்லைன் பேமெண்ட் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் எளிதாக முடிந்து விடுகிறது. சாதராண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அனுமதிக்கப்படுகிறது. 1 ரூபாய் பொருட்கள் கூட இதன் மூலம் எளிதாக வாங்க முடிகிறது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு அதிவேகமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பணப் பரிவர்த்தனை 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் 139 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்பொழுது, பேமெண்ட்களின் நோக்கத்தை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜனவரி 1, 2024 (நேற்று) முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததுள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்ய, Google Pay, Paytm, PhonePe போன்ற செயலிகளுக்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவுறித்தியுள்ளது.

UPI ATM: இனி பணம் ஏடிஎம் கார்டு தேவை இல்லை.! யுபிஐ மட்டும் போதும்.!

மோசடிகளை தடுக்க ஒவ்வொரு முறையும் ஒரு பயனர் அவர்கள் இதுவரை பரிவர்த்தனை செய்யாத மற்றொரு பயனருக்கு, (அதாவது) இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்றால், ரூ,2,000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. (முதல் முறையாக ரூ,2,000-க்கு மேல் அனுப்புகிறோம் என்றால் அதன் பிறகு பணம் அனுப்புவதற்கு 4 மணி நேரம் ஆகும்).

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் செலுத்த தேவையில்லை..! பேடிஎம் விளக்கம்..!

நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ,5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே (Tap and Pay )வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

கூடுதலாக, இந்தியா முழுவதும் யுபிஐ ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. இதன்மூலம், QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். ஆன்லைன் வாலட்கள் போன்ற ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ,2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்னதாக, UPI பரிவர்த்தனைகளுக்கான தினசரி கட்டண வரம்பு அதிகபட்சமாக ரூ. 1 லட்சமாக இருக்கும். இருப்பினும், UPI பேமெண்ட்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 8, அன்று மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு UPI மூலம் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக RBI உயர்த்தியது குறிப்பிடத்த்க்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்