Categories: இந்தியா

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வருகிறது ஆர்.பி.ஐ

Published by
Muthu Kumar

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். இப்படி ஆன்லைனில் பணம் செலுத்தும் மற்றும் பெரும் முறைகளில் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஆன்லைன் முறையில் அதிகமாக பண மோசடிகள் நடை பெற்று வருகிறது இதைத் தடுக்கவே தற்பொழுது ரிசர்வ் வங்கி புதிய விதிகளைக் கொண்டுவர இருக்கிறது. இதன்படி கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேசன் எனும் புதிய விதிமுறைகள் வர இருக்கின்றன.

பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களின் கார்டு விவரம் கொடுத்து பணம் செலுத்தும் போது அந்த தகவல்கள் திருடப்பட்டு அவற்றின் மூலம் பணம் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தற்பொழுது வர இருக்கும் டோக்கனைசேசன் முறைப்படி உண்மையான கார்டு விவரங்களுக்கு பதிலாக டோக்கன் எண்  பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர், ஒரு பொருளுக்கான பணத்தை செலுத்தும் போது கடையின் வணிகர் கார்டு ஐப் பெற்றுக்கொண்டு அதற்கான டோக்கன் எண்ணைக் கேட்டு சம்பந்தப்பட்ட கார்டு நெட்ஒர்க் கிற்கு ஒப்புதல் கேட்பார். பிறகு அந்த நெட்ஒர்க், வணிகருக்கு டோக்கன் எண்ணை அனுப்புவார்கள் அதன்பின் சிவிவி (cvv) எண் மற்றும் OTP ஐ கொடுத்து வர்த்தகத்தை முடித்துக்கொள்ளலாம்.

இதன் மூலம், ஆன்லைனில் நடைபெறும் பண மோசடியை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

SAvsIND : மாஸ் காட்டிய சஞ்சு சேட்டன்! முதல் டி20 போட்டியை வென்றது இந்திய அணி!

SAvsIND : மாஸ் காட்டிய சஞ்சு சேட்டன்! முதல் டி20 போட்டியை வென்றது இந்திய அணி!

டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…

30 mins ago

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

10 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

10 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

10 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

13 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

13 hours ago