மாஸ்டர் கார்டு டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை..!
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை.
புதிய மாஸ்டர்கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், பணம் செலுத்தும் முறை தரவு சேமிப்பிற்கான வழிமுறைகளுக்கு இந்த நிறுவனம் இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பிறகு, வங்கிகளால் புதிய மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. இருப்பினும், புதிய தடையால் பழைய மாஸ்டர் கார்டு தொடரும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர்கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.