PAYTM செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் காலக்கெடுவானது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Paytm நிறுவனத்தின் kyc குறைபாடுகள் மற்றும் தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தததன் காரணமாக அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவோ தடை விதிக்கப்படுவதாக கடந்த மாதம் 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் PAYTM பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்தும் தேதியானது மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PAYTM பேமெண்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் (வணிகர்கள் உட்பட) மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இருப்பினும், Paytm பேமெண்ட் வங்கியால் பராமரிக்கப்படும் One97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும் Paytm பேமெண்ட்ஸ் சேவைகளின் நோடல் கணக்குகளை மூடுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை.