இந்தியா மீது கொடூர தாக்குதல்.. தீவிரவாதிகள் சதி… பாகிஸ்தான் தலையீடு அம்பலம்.. உஷாரான உளவுத்துறை..
- இந்தியாவில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நம் அண்டை நாடான பாகிஸ்தான் சதிதிட்டங்களை தீட்டி வருகிறதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
- உளவுத்துறையின் தகவலால் உஷாராகும் பாதுகாப்பு துறை.
மேலும் இது, காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகளை தொடர்ச்சியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் தற்போது, மேற்கு எல்லையில் இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை அதிகரித்த பின் தீவிரவாதிகளால் ஊடுறுவ முடிவதில்லை. இவர்களை கண்டவுடன் சுடும் இந்திய ராணுவம் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது, எனவே மற்றொரு அண்டை நாடான வங்காளதேசத்தில் பாகிஸ்தான் தன்னுடைய வேலையை தொடங்கியிருப்பது, தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வங்காளதேசத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் என்ற பங்களாதேஷ் அமைப்பிற்க்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்து வருகிறது.
எனவே, வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் இருக்கும் 40 ரோஹிங்கியாக்களை இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பணிக்கு ஆட்களை எடுத்துள்ளது. இதற்க்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முதல் தவணையாக ரூ. 1 கோடியை வங்காளதேச பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியுள்ளது எனவும், இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தகவல்கள் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்திய உளவுப்பிரிவான ரா உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மாதம் மேற்கு வங்காளத்தில் முசாரப் ஹூசைன் என்ற 22 வயது பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். இவன் வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பை சேர்ந்தவன். பெங்களூருவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு முசாரப் ஹூசைனை கைது செய்து விசாரித்தது வருகின்றனர். இந்த உளவுத்துறையின் உறுதியான தகவல்களால் இந்திய பாதுகாப்பு குறித்த உறுதிதன்மையை நிலைநிறுத்த பாதுகாப்பு படைபிரிவும், உளவுப்பிரிவும் தாங்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.இந்த செய்தி இந்திய நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.