தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.
தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது.
இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், காய்கறிகளை விற்ற பின் அந்த பணத்தை ஒரு பருத்தி பையில் சேமித்து அலமாரியில் வைத்து இருந்தேன். மீண்டும் அந்த பணத்தை தேவைக்காக பயன்படுத்த பையை திறந்தபோது 500 ரூபாய் நாணயத்தாள்கள் அனைத்தும் எலிகளால் சேதமாக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை மாற்றுவதற்காக உள்ளூர் வங்கிகள் அனைத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவரது கோரிக்கையை மறுத்ததாகவும் இந்த பணம் இனிமேல் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்து அவரை ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு அந்த விவசாயிக்கு உதவ முன்வந்துள்ளார். அவரிடம் அவருக்கு விருப்பமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அமைச்சருக்கு, ரெத்ய நாயக் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…