பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் கார்டு – உச்சநீதிமன்றம் அதிரடி..!

Default Image

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்
கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், நீதிபதி பி. ஆர். கவாய் மற்றும் நீதிபதி பி.வி. 2011 ஆம் ஆண்டு பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பித்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன்பே ரேஷன் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மேலும், அந்த வழிகாட்டுதல்கள் இப்போது வரை செயல்படுத்தப்படாததற்கு எந்த காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை:

‘நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் தொழிலைப் பொருட்படுத்தாமல் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களின் பட்டியலை தயாரிக்கும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் உதவியையும் பெறலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான்கு வாரங்களில் நிலை அறிக்கையை தாக்கல்:

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான நிலை அறிக்கையை இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கிடையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு அல்லது பிற அடையாள அட்டையை கேட்காமல் ரேஷன் விநியோகத்தை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்